கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜவை காப்பாற்றும் விதமாக நடந்து கொள்வதாக தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் பேட்டி..!

பாஜக எச்.ராஜா முன்னாள் முதல்வர்கள் மற்றும் பெண்கள் பற்றி இழிவாகப் பேசியது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜவை காப்பாற்றும் விதமாக நடந்து கொள்வதாக தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மார்க்ஸ் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த சுபவீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைக் கண்டித்து, பாஜக சார்பில் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக எச்.ராஜா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் மகளிர்களை இழிவாக பேசியதாக பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அது குறுத்து தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்த மாநில துணை பொதுசெயலாளர் மார்க்ஸ்ம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த புகாரில் தற்போது வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மார்க்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எச்.ராஜா பேசியது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் அப்போதே புகார் அளித்த நிலையில், காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டபோது சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது என கூறினார்.

முன்னாள் முதல்வர்கள் மற்றும் பெண்கள் பற்றி இழிவாக பேசியது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இது பாஜகவை காப்பாற்றும் விதமாக காவல் கண்காணிப்பாளர் நடந்து கொள்வதாக தெரிகிறது என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது சட்ட வல்லுனர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும், இதுவரையும் அவ்வாறு கூறுவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பொய்யாக்குவது போல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

எனவே, உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...