திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த என். தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு..!

மறைமுக தேர்தலில் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயராக என்.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மேயர் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் 60 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், திருப்பூர் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9.30 மணிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட என். தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தினேஷ்குமாரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக தினேஷ்குமார் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதனையடுத்து, மேயருக்கான அங்கி மற்றும் செங்கோல் அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேயர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



மறைமுக தேர்தலில் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...