கோவை பொள்ளாச்சி நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சியாமளா நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு..!

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 31 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் திமுகவைச் சேர்ந்த சியாமளா நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு.


கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சியாமளா நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 31 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இன்று நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.



நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த நகரமன்ற தலைவர் வேட்பாளர் சியாமளா நவநீதகிருஷ்ணன் இன்று அனைத்து வெற்றிபெற்ற வேட்பாளர்களும் ஒருமனதாக முன்மொழிந்தனர்.

இதனையடுத்து, சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு சியாமளா நவநீதகிருஷ்ணன் அளித்த பேட்டியின்போது:-

கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் மகத்தான ஆதரவு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளான குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், தனக்கு இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதலமைச்சர், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...