கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு..!

மேலும், கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், இவர் பெற்றுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், 19வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி பிடித்தது.

கடந்த 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், நேற்று திமுக தலைமை மேயர் வேட்பாளரை அறிவித்தது. வார்டு 19 யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளராகவும், 92வது வார்டில் வெற்றி பெற்ற வெற்றி செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், கல்பனா ஆனந்தகுமார் ஒரு மனதாக மேயராக தேர்வு செய்யப்பட்டார்.



அவருக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா வெற்றி சான்றிதளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுவரை கோவை மாநகராட்சியில் கூட்டணி கட்சியினர் மட்டுமே மேயர் ஆக பதவி வகித்த நிலையில், முதல் முறையாக முழு அதிகாரத்துடன் மேயர் பதவியை திமுக பெறுகிறது.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...