கோவை துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92-வது வார்டில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இரா.வெற்றி செல்வன். 51-வயதான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் திமுகவில் கோவை மாநகராட்சி 92-வது வட்ட செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92-வது வார்டில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய வெற்றி செல்வன், “எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் நன்றி.

திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி தேடி வரும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டு. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டில் இருந்து என்னைத் துணை மேயராக அறிவிக்கப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை மேயர் வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பை தேடிக் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி” என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...