கோவையில் கடந்த 2 மாதங்களில் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்..!

இனி வரும் நாள்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை.


கோவை: கோவையில் கடந்த 2 மாதங்களில் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு நடைபெற இருந்த 99 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி, பிப்ரவரி என 2 மாதங்களில் மட்டும் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 8 திருமணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை திருமணம் நடைபெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது.

இனி வரும் நாள்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...