ஹோண்டா டூவீலர்கள் சார்பில் கோவையில் போக்குவரத்துப் பூங்கா துவக்கம்


தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தினை கொண்டாடும் விதமாகவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் தினசரி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான பழக்கத்திற்கான தனது பொறுப்பினை அளிக்கும் வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்  அதன் 11-வது போக்குவரத்து பூங்காவை இந்தியாவில் முதன்முறையாக கோவையில் துவங்கியது.



மேலும், ஹோண்டா தனது தனிச்சிறப்பான "டிரீம் ரைடிங்" முயற்சியையும் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துவங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் வாகனம் ஓட்டுபவராக ஆக இம்மையத்தில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்கவிழாவில் தீபக் எம் டாமோர், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தலைமையக துணை ஆணையர் மூர்த்தி, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், கோவை மாநகர காவல் துறை யத்வீந்தர் சிங் குலரியா, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றம் சந்தைப்படுத்துதல் மூத்த  துணைத் தலைவர் டோமாகி நாக்யாம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் தேற்கு பிராந்திய துணை இயக்குநர் யோகேஷ் மதுர், மண்டல விற்பனை தலைவர் ஆஷிஷ் சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மூத்த தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா பேசியதாவது:-

முதலில் வருபவர்கள் தத்துவத்தின் கீழ் 1970 முதல் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவது ஹோண்டாவின் முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது. இந்தியாவிலும் எங்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் பாதுகாப்பினை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஹோண்டா ஏற்கனவே பின்பற்றி வருகிறது.

பல்வேறு சாலை பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக, ஹோண்டா 2 வீலர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியுள்ளது. எங்களின் சாலை பாதுகாப்பு முயற்சிகளை இங்கே விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை ஹோண்டா 2 வீலர் இந்தியாவுக்கு வழங்கிய கோவை மாநகர காவல் துறைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...