கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை..!

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலணி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் மணிகண்டன் (37). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி மணிகண்டன் தன் குடும்பத்துடன் சங்கரன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அருகே வசித்து வரும் பாபு என்பவர் பார்த்த போது மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு மற்றும் மணிகண்டன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அங்கு வந்த தடயவியல் துறை அதிகாரிகள் வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...