கோவை விக்டோரியா ஹாலில் சிறப்பாக நடைபெற்று வரும் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா..!

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.



கோவை: கோவை விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.



10 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு துவங்கியது. நடைபெறும் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகின்றது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.



1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். தற்போது வரை, 22 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

5 வது வார்டு உறுப்பினர் நவீன்குமார், தனது தந்தை தாயாரின் பெயரைக்கூறி, கடவுளின் பெயரால் பொறுப்பேற்றுக் கொண்டார். 7வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் தளபதி பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.



இதையடுத்து, 15 வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாமணி பச்சமுத்து அன்னை இந்திரா பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 18வது வார்டு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தீரன் சின்னமலை, ஈசன் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், 20வது வார்டு திமுக உறுப்பினர் மரியராஜ் கலைஞர், தளபதி ஆகியோரை வணங்கி எனக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...