உங்களுக்குள் ஞான ஒளி ஏற்றி வாழ்வை ஆனந்தமாக்குங்கள் மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு விருப்பம்

உங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய ஞான ஒளியை ஏற்றி வாழ்வை ஆனந்தமயமனதாக மாற்றிக்காட்டுங்கள்’ என்று ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு கூறினார்.


கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு மிக கோலாகலமாக நடைபெற்றது.



இதில் 170-நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்தியாவுக்கான கொலம்பியா நாட்டு தூதர் மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர்.



இவ்விழாவில் சத்குரு பேசியதாவது:-

ஒரு வருடத்தில் 13-சிவராத்திரிகள் உள்ளன. அதில் மஹாசிவராத்திரியானது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பினால், நம்முள் உள்ள உயிர்சக்தி இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். ஆகவே , இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருந்தால் மகத்தான நன்மைகளை பெற முடியும். உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் செய்யும் உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். ஆகவே, உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மஹாசிவராத்திரி நாளில் ஏற்றி விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பணம், சொத்து வைத்துள்ளீர்கள் என்பது வாழ்வின் சிறப்பை தீர்மானிக்காது. எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் முழுமையான தெம்புடன் வாழ்கிறீர்கள் என்பது தான் உங்கள் வாழ்வின் தரத்தை தீர்மானிக்கும். ஆகவே , உங்கள் உயிர் சக்தியை தெம்பாக்கி வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றி காட்டுங்கள். கொரோனா பெருந்த தொற்றால் இழந்த உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுப்போம்.

இவ்வாறு சத்குரு கூறினார்.

இவ்விழா தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பெண் தன்மையின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக திகழும் லிங்க பைரவியின் மஹாயாத்திரை நடைபெற்றது. பின்னர், ஆதியோகி முன்பு ‘மஹா யோக யக்னா’ வேள்வியை சத்குரு ஏற்றி வைத்தார்.



ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் யோக விஞ்ஞானத்தை பரிமாறுவதற்கான உறுதியை இந்த வேள்வி குறிக்கிறது. மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருக்கும் விதமாக, பல்வேறு மாநில கலைஞர்களின் இசை , நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகர் ஷான் ரோல்டன், அசாம் மாநில பாடகர் பப்பான், தெலுங்கு பாடகி மங்கலி, பாலிவுட் பாடகர் மாஸ்டர் சலீம், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்சி ஆகியோர் சிவனை போற்றி பாடல்கள் பாடி அரங்கை அதிர செய்தனர்.

அவர்களுடன் ஈஷாவின் சொந்த இசை குழுவான ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவும்’ ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணித்தனர். வண்ணமயமாக நடந்த ஆதியோகி திவ்ய தரிசன 3 டி ஒலி, ஒளி காட்சி பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது.



நள்ளிரவு மற்றும் பிரம்ம முகூர்த்த வேளையில் சத்குரு சக்திவாய்ந்த தியான செயல்முறையை நிகழ்த்தினார். அத்துடன், கோடிக்கணக்கான மக்களுக்கு பிரசாதமாக வழங்கும் ருத்ட்ராட்ச பிரதிஷ்டையையும் சத்குரு மேற்கொண்டார்.

மேலும், ஈஷாவை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட காரணமாக இருக்கும் சத்குருவுக்கு மேடை யில் மரியாதை செய்து நன்றி கூறினர். விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...