கோவை வெள்ளியங்கிரி 3-வது மலையில் மயங்கி விழுந்த திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு

உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் 3-வது மலையில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலைத்தொடரில்7-ஆவது மலையில் உள்ள சுயம்பு லிங்க சுவாமியைத் தரிசனம் செய்ய, கோவைமட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் கடந்த 2-தினங்களாக 7-மலைகளில் பாதயாத்திரையாக நடந்து செல்ல துவங்கி உள்ளனர்.

வெள்ளிங்கிரி மலை ஏற்றதற்காக அங்கு வரும் பக்தர்கள் கையில் மூங்கில் குச்சியுடன் தொடர்ந்து நடந்து சென்று வரும் நிலையில், வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமியைத் தரிசனம் செய்யத் திண்டுக்கல் மாவட்டம் பெரியூர்பட்டியை சேர்ந்த பழனிவேல் (24). என்பவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் மலை ஏறியுள்ளார்.

அப்போது மூன்றாவது மலை பாம்பாட்டி சித்தர் குகை அருகே வந்தபோது திடீரென பழனிவேல் மயங்கிக் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த நண்பர்கள் முதலுதவி செய்தனர்.

இருப்பினும் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, உடன் சென்ற நண்பர்கள் பழனிவேல் உடலை மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். மேலும் ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...