அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் சென்டர்களில் டியூஷன் எடுப்பது குறித்து கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் சென்டர்களில் டியூஷன் எடுப்பது, பகுதி நேரமாக வருவாய் ஈட்டும் நோக்கில் யூடூப் சேனல்கள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) உத்தரவிட்டுள்ளது.


கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் சென்டர்களில் டியூஷன் எடுப்பது குறித்துக் கண்காணிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த ராதா என்பவர் தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.எம். சுப்பரமணியம் இந்த உத்தரவையும், கருத்துகளையும் பிறப்பித்திருந்தார்.

அது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு சந்தேகத்திற்கிடமின்றி போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது.

ஆனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு அந்த அளவிற்கான தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பது போன்ற கருத்துக்களையும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மைச் செயலர், மாவட்டம் தோறும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாகத் தொழில் செய்வது பகுதி நேர வேலைகளைச் செய்வது, டியூஷன் சென்டர் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை தொடர்பான தகவல்கள், புகார்கள் ஆவணங்களைச் சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...