பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தொடர் போராட்டம்

அரசு விதிமுறைக்கு மாறாக அதிக பணிப்பளு ஒதுக்கீடு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் (Association of University Teachers) பிப்ரவரி 28-முதல் மார்ச் 3-வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிப்ரவரி 25-அன்று மாலை நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பிஎஸ்ஜி கிளையின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிப்ரவரி 28-முதல் மார்ச் 3-வரை தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

கல்லூரியில் சமூக நீதியைக் காக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் காக்க வேண்டும். 70 ஆசிரியர் பணியிடங்கள் 42 அலுவலகப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

உயர் கல்வி தனியார் மயமாக்குவதைத் தடுக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி பளுவை முறையாக சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் மீது உள்ள பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

மறைமுகமாக பணியிடத்தைக் குறைக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். மாணவர்களிடம் 'SEED FUND' என்று வசூல் செய்வதைத் தவிர்த்திட வேண்டும். கல்லூரி முதல்வர், ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

பிஎஸ்சி கல்வி நிறுவனத்தின் பெயரையும் புகழையும் காத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 28 அனைத்து உறுப்பினர்களும் கறுப்புக்கொடி அணிந்து பணியாற்றினர்.

மார்ச் 1 கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மார்ச் 2 கல்லூரி நுழைவுவாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாலை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவங்கும்.

மார்ச் 3 உயர்கல்வி துறை மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் இப்பிரச்சினையில் உடனே தலையிடச் செய்ய எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...