கோவை பெரிய கடை வீதி அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!

கோவை ஈஷாவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து மூன்று பேருடன் வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.



கோவை: கோவை பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து வந்த மூன்று பேரை தனது காரில் அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார்.

அப்போது,, கார் பெரியகடைவீதி ராயல் தியேட்டர் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட தங்கராஜ் மற்றும் காரில் இருந்த 3 பேர் உடனடியாக காரை விட்டு வெளியே இறங்கினர்.

மேலும், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் துவங்கியது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது.

கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பெரியகடைவீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...