கோவை வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்..!

மேலும், வால்பாறை அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு 11வது வார்டு உறுப்பினர் செந்தில் உணவுப் பொருட்கள் வழங்கினார்.


கோவை: கோவை வால்பாறையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை திமுக கட்சியினர் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இதையடுத்து, திமுக கட்சியினர் பள்ளி குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



மேலும், வால்பாறை அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு 11வது வார்டு உறுப்பினர் செந்தில் உணவுப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில், வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் காமாட்சி கணேசன், ஜே பாஸ்கர், அழகு சுந்தரவல்லி, செல்வம், செந்தில், அன்பரசன், சவுந்தர பாண்டி, டென்சின் கிருஷ்ணமூர்த்தி, அசைதம்பி, பாண்டி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...