கோவையில் நாளை நடைபெறவுள்ள மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு விக்டோரியா ஹாலில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

கடந்த 28 நாட்களாக விக்டோரியா ஹாலினை புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



கோவை: கோவையில் நாளை நடைபெறவுள்ள மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவின் முன்னேற்பாடுகள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விக்டோரியா ஹாலினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர் கூறியதாவது:-

நாளை நடைபெறவுள்ள மாமன்றத்தின் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவின் முன்னேற்பாடுகள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 28 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விக்டோரியா ஹாலினை புதுப்பிக்கும் பணி இன்று நிறைவு பெறுகிறது என்று விக்டோரியா ஹாலினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.



மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விக்டோரியா ஹாலில் நடைபெறுவதால் புதுப்பிக்கும் வேலையானது விரைவாக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா ஹால் வரலாற்று சிறப்புமிக்க இடம் என்பதால் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இக்கட்டிடத்தில் மாற்றம் என்றால் நாற்காலிகள் மட்டுமே இக்காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பாரம்பரியத்தில் அமையப்பெற்ற இக்கட்டிடத்தினை பழமை மாறாமல் புதுப்பித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.



இக்கட்டிடத்தின் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சந்தித்த சவால்கள் என்றால், கட்டிட கூரையின் பழமை மாறாமல் அமைப்பதே சிறிது கடினமாக இருந்ததாகவும், மேலும், வெயில் காலம் என்பதால் வெயிலில் கூரை அமைப்பது பணியாளர்களுக்கு சவாலான ஒன்றாகவே இருந்தது என தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...