கோவையில் அடமான கடன் என்ற பெயரில் ரூ.2.5 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையாளரிடம் புகார்

மேலும், கோவை சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.



கோவை: கோவையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை திமுகவினர் அபகரிக்க முயற்சிப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் பெண் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் தனது சொத்தினை திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அபகரிக்க முயல்வதாகவும், அவர்களிடமிருந்து தனது சொத்தினை மீட்டுத் தருமாறும், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.



இது குறித்து அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை சாய்பாபா காலணி பகுதியில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தின் (வீடு) பேரில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக 2020ம் ஆண்டு பெருந்துறையைச் சேர்ந்த ஆடிட்டர் மாணிக்கம் என்பவரிடம் 11 லட்ச ரூபாயை அடமானம் கடனாக பெற்றதாகவும், மூன்று மாதம் கழித்து அதனை வட்டியுடன் திருப்பி செலுத்த சென்ற போது 11 லட்சத்திற்கு பதில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சொத்து பத்திரங்களை திருப்பி தருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, முறையாக நான் பெற்ற தொகையை தந்து விடுகிறேன் எனது சொத்து பத்திரங்களை திருப்பித் தாருங்கள் என கூறிய போதும், சுரேஷ், ஆடிட்டர் மாணிக்கம் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மகுடபதி, சிவகுமார் ஆகியோர் தன்னை மிரட்டி தனது வீட்டினை பூட்டி வைத்து விட்டு 50 லட்சம் தருமாறு மிரட்டுவதாக தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அவர்களை அணுகினால் சுரேஷ், மகுடபதி, சிவக்குமார் ஆகியோர் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள். எங்கள் மீது உன்னால் எங்கு போனாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என மிரட்டி தாக்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவை சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...