கோவையில் தொடரும் ஆன்லைன் மோசடிகள்: 4 வழக்குகள் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை..!

ஆன்லைன் மூலமாக பண மோசடியில் சிக்கி பல லட்சங்களை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஆன்லைன் மூலமாக பண மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பணம் மோசடி தொடர்பாக, கோவை சைபர் கிரைம் போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அதன் விபரங்கள் பின்வருமாறு:-

அன்னூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (33), தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார்.

வேலை வாய்ப்பு சார்ந்த வலைதளத்தை பார்த்த இவர், குறிப்பிட்ட தொகை 'டெபாசிட்' செய்து, பொருட்களை வாங்கி விற்பனை செய்தால், அதிக தொகை கமிஷனாக கிடைக்கும் என குறிப்பிட்டிருந்ததை நம்பியுள்ளார்.

அதன்படி, கம்ப்யூட்டர், மொபைல் போன், லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்களை வாங்கி விற்பனையும் செய்துள்ளார். அவர் ரூ. 7.23 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ள நிலையில், கமிஷன் தொகை தராமல் அந்நிறுவனம் இழுத்தடித்துள்ளது.

பொருட்களை விற்பனை செய்யுமாறு வலியுறுத்தி வந்துள்ளது. பணத்தை திருப்பி தராததால், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சரண்யா புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

அன்னூரைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் இவர் 'பண்ட் மேளா' எனும் செயலி வாயிலாக, குறிப்பிட்ட தொகை 'டெபாசிட்' செய்தால், அதிக தொகை கமிஷனாக கிடைக்கும் என்று கூறியதை நம்பி, ரூ. 5.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.

கமிஷன் இரு மடங்காக கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவையை சேர்ந்தவர் அருள்ராஜ் (40), அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது கிரெடிட் கார்டில், இவருக்கே தெரியாமல் ரூ. 2,22,750 பல்வேறு தவணைகளில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவில்பாளையம் அருகே குன்னத்தூரைச் சேர்ந்த ஹர்சவர்தன் (37), இரும்பு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் கொல்கத்தாவை சேர்ந்த தனியார் ஸ்டீல் நிறுவனத்திடம் பொருட்களை வாங்கி, குறிப்பிட்ட 'இ-மெயில்' முகவரி வாயிலாக கடந்த எட்டு ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அதே நிறுவனத்தின் பெயரில், வேறொரு இ-மெயில் முகவரியில் இருந்து இனிவரும் காலங்களில் இம்முகவரி வாயிலாக பணம் செலுத்துமாறு தகவல் வந்துள்ளது. அதை நம்பி, 10 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

பிறகு, போலி இணையதள முகவரி வாயிலாக பணம் அபரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹர்சவர்தன் புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...