கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் பதிவு..!

கொரோனா வழிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மிரட்டி வாங்கியதாக மேலும் ஒரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், கொரோனா வழிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம், கந்தசாமி, செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி, மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது பந்தய சாலை போலீசார் இந்திய தண்டனை சட்டம் (143), (341), (269) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...