கோவையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி..!

மலையேறுவதற்கு அனுமதி என்ற தகவல் அறிந்ததும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


கோவை: கோவையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் சாமிதரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.



மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்வதால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர்.

மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.



2 ஆண்டுகளுக்குப் பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...