கோவையில் கோனியம்மன் கோவில்‌ தேர்‌ ஊர்வலத்தை முன்னிட்டு தற்காலிக போக்குவரத்து மாற்றம்‌ அறிவிப்பு.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 2 ஆம் தேதி, மதியம்‌ 2 மணிக்கு தொடங்கவுள்ளதால், அன்று மதியம்‌ 12.00 மணி முதல்‌ இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


கோவை: வருகிற 02.03.2022 அன்று கோனியம்மன் கோவில்‌ ஊர்வலத்தை முன்னிட்டு, தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கோவையில் பிரசித்தி பெற்றகோனியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 02.03 2022 அன்று மதியம்‌ 2 மணிக்கு தொடங்கவுள்ளதால், அன்று மதியம்‌ 12.00 மணி முதல்‌ இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்‌ கீழ்க்கண்டவாறு செய்யப்படுகிறது.

1. பாலக்காடு மற்றும்‌ பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம்‌ வழியாக நகருக்குள்‌ வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ சுங்கம்‌ பைபாஸ்‌, ரயில்வே மேம்பாலம்‌, திருச்சி சாலை கிளாசிக்‌ டவர்‌ வழியாகச் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

2. பாலக்காடு மற்றும்‌ பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம்‌ வழியாகத் தடாகம்‌ ரோடு மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ சாலை செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ சுண்ணாம்பு காளவாய்‌ புட்டுவிக்கி சாலை, சேதுமாவாய்க்கால்‌ செக்போஸ்ட்‌, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு வழியாகக் காந்தி பூங்காவை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

3. அவிநாசி சாலையிலிருந்து வரும்‌ வாகனங்கள்‌ அவினாசி மேம்பாலம்‌ வந்து கூட்செட்‌ ரோடு வழியாகச் சென்று கனரக வாகனங்கள்‌ கிளாசிக்‌ டவர்‌ வழியாகவும்‌, இலகுரக வாகனங்கள்‌ வின்சென்ட்‌ ரோடு வழியாகவும்‌ செல்ல வேண்டும்‌.

4. திருச்சி சாலையிலிருந்து வைசியால்‌ வீதி வழியாக பேரூர்‌ செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ சுங்கம்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ வந்து பேரூர்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

5. பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள்‌ வரும்‌ வாகனங்கள்‌ சலிவன்‌ வீதி வழியாக காந்திபார்க்‌ அடைந்து நகருக்குள்‌ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்‌.

6. பேரூரிலிருந்து பாலக்காடு ரோடு செல்லும்‌ வாகனங்கள்‌ சிவாலயா சந்திப்பில்‌ வலது பக்கம்‌ திரும்பி புட்டுவிக்கி ரோடு வழியாகவும்‌, உக்கடம்‌ செல்லும்‌ வாகனங்கள்‌ பேரூர்‌ ரோடு அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பிலிருந்து வலது பக்கம்‌ திரும்பி பேரூர்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

7. தடாகம்‌ சாலையிலிருந்து பாலக்காடு செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ பொன்னையாராஜபுரம்‌, சொக்கம்புதூர்‌, சிவாலயா தியேட்டர்‌ சந்திப்பு, பேரூர்‌ பைபாஸ்ரோடு வழியாக உக்கடம்‌ அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

8. சுக்கரவார்பேட்டை ரோட்டிலிருந்து தெலுங்கு பிராமினர்‌ வீதி வழியாக ராஜ வீதி செல்லும்‌ வாகனங்கள்‌ காந்திபார்க்‌, சொக்கம்புதூர் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

9. சுக்கரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன்‌ வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள்‌ செல்ல அனுமதி இல்லை.

10. கனரக வாகனங்கள்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை நகருக்குள்‌ வர அனுமதி இல்லை.

11. தேர்‌ வரும்‌ ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள்‌ வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 20.00 மணி வரை எந்த வாகனமும்‌ நிறுத்த அனுமதி இல்லை.

மேற்கண்ட, தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்குப் பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...