கோவையில் 17-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10-ஆண்டு சிறை

17-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையில் 17-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10-ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆழியாறு அடுத்த கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(20). ஓட்டுனராக பணியாற்றி வந்த விக்னேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 17-வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மாணவியைப் பழனி அழைத்துச் சென்று திருமணமும் செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 24- மணி நேரத்தில் சிறுமியையும், விக்னேஷையும் பிடிக்கின்றனர். பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், விக்னேஷ் மீது போக்சோ, கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விக்னேஷுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20-ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...