கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அச்சங்கத்தினர் கூலி உயர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கூலி உயர்வு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்குக் கடந்த 8-ஆண்டுகளாகக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அச்சங்கத்தினர் கூலி உயர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கூலி உயர்வு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டம் முடிவடையாத நிலையில் நாளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே, நாளை திருப்பூர், சோமனூர், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் இச்சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.