கோவையில் தார்‌ சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்: மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ தார்‌ சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை‌: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ தார்‌ சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (28.02.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.75 நியூ போயஸ்‌ கார்டன்‌ பகுதியில்‌ 1 முதல்‌ 7 வது வீதி வரை ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 750 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திலும்‌, சலாமத்‌ நகர்‌ பகுதியில்‌ ரூ.31.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 701 மீட்டர் தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்திலும்‌ (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ தார்‌ சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை ஒருவார காலத்தில்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமெனவும்‌, கோவை மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ தற்போது சித்தார்த்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இதனை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க வேண்டுமெனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ மாரிசெல்வி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, உதவிப்‌ பொறியாளர்‌ சத்யா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...