அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வரும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வாக்குப்பதிவின்போது திமுக தொண்டரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவினர் மீது திமுகவினர் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருவதாக திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.