கிராமசபை அமைத்திருப்பது போல மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை உள்ளிட்டவை அமைக்கக்கோரி மநீம சார்பில் மனு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் காவல்துறையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கிராமசபை அமைத்திருப்பது போல மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கல் மூலம் மக்களுக்கான அதிகாரத்தை வழங்க வேண்டும்.
அதற்கான வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினர் மனு அளிக்க வந்திருந்தனர்.
இந்நிலையில், மனு அளிக்க ஏராளமானோர் மக்கள் குறைதீர் கூட்ட அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.