திருப்பூர் அரசு பேருந்தில் நடத்துனரிடம் பணம் திருடிய ஆசாமி..!

போலீசார் உதவியுடன் பயணிகளின் பைகளில் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்தில் நடத்துநரின் பணம் திருடு போனதையடுத்து, பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு நகரபேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. 

இந்நிலையில், பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துநரான ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இதையடுத்து, அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலைக் கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டு, பேருந்திலிருந்த பெரும்பாலான வடமாநில இளைஞர்களிடம் நடத்துநர் மற்றும் ஓட்டுனர் மணிபர்ஸ் குறித்து சோதனை நடத்தினர். 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை மேற்கொண்டும் கடைசிவரை மணிபர்ஸ் கிடைக்கவில்லை. 



பின்னர், நடத்துநர் ரங்கசாமியோ பயணிகளிடம் பர்சில் அடையாள அட்டை, நடத்துநர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 பணம் இருக்கிறது, பணத்தை எடுத்துவிட்டு மணிபர்சை பேருந்தில் போட்டுவிடுங்கள் என கூறிவிட்டு மீண்டும் பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, அரசு பேருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...