கோவையில் பக்கத்து வீட்டு நபரின் பைக்கை தீ வைத்து எரித்தவர் கைது..!

சிசிடிவியில் பதிவான காட்சிகளில் இரவில் பைக் மீது துணியில் தீப்பற்றி வைத்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் பக்கத்து வீட்டு நபரின் பைக்குக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பிரபு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 'வாகனத்தில் தீப்பிடித்தது எப்படி' என்று கண்டறிவதற்காக, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளியான கில்பர்ட் (எ) சபரி (40), துணியில் தீப்பற்ற வைத்து பைக் மீது போடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த எஸ்.ஐ., குணசேகரன், வாகனத்துக்கு தீ வைத்த கில்பர்ட்டை கைது செய்தார். பின்னர், கோர்ட் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...