கோவை வஉசி உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவு..!

வஉசி பூங்காவில் உள்ள பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.


கோவை: கோவை வஉசி உயிரியல் பூங்காவில் உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

கோவை வஉசி உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை ஒன்றிய வன உயிரின ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் குறித்து வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர்.

கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கும் இடமாக வஉசி உயிரியல் பூங்கா விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்குகள், பாம்புகள், பல்வேறு வகையான பறவைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த வன விலங்குகளை நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்து வந்தனர். இந்த பூங்காவில் ஒன்றிய வன உயிரின ஆணைய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனர்.

அப்போது, இந்த பூங்காவில் மிகச் சிறிய இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அந்த விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், கோவை வஉசி பூங்காவை விரிவாக்கம் செய்து வன விலங்குகள், அதற்குரிய சூழலில் வசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வன உயிரின ஆணைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி அதிகாரிகள் வஉசி பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்தனர். ஆனால் ஆண்டுகள் கடந்தபோதும் விரிவாக்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து வன உயிரின ஆணைய அதிகாரிகள் வஉசி பூங்காவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வஉசி உயிரியல் பூங்காவில் என்னென்ன பறவைகள், விலங்குகள் உள்ளன? என்பது குறித்து கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோவை கோட்ட வன அதிகாரிகளுக்கு, வன உயிரின ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கோவை வனச்சரகர் அருண் தலைமையில் ஊழியர்கள் கோவை வஉசி பூங்காவில் உள்ள வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வன உயிரின ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்படி வஉசி பூங்காவில் உள்ள பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு சென்னை வன உயிரின ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வஉசி பூங்காவை வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து இதுவரை எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை’’ என்றார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...