கோவை  கணியூர் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி..!

இன்று அதிகாலை கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே மான் தலை நசுங்கி உயிரிழந்தது.



கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.தற்போது,கோடை காலம் தொடங்கியுள்ளதால், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி, குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்குள் வழிதவறி வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே மான் தலை நசுங்கி உயிரிழந்தது. இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.



அன்னூரிலிருந்து வழிமாறி வாகராயம்பாளையம் பகுதி வழியாக,கணியூருக்கு இந்தமான்இரவில் வந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இப்பகுதியில் மான் அடிபட்டு இறப்பது இதுதான் முதல்முறை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சாலை விபத்தில், புள்ளிமான் இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...