மேம்பாலப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த விபரீதம்: கோவையில் துப்புரவு தொழிலாளி மீது மரம் சாய்ந்து விபத்து

மக்கள் ராட்சத மரத்தை அப்புறப்படுத்தினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த துப்புரவு தொழிலாளியை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



கோவை: கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மரத்தை அகற்ற முயன்ற போது துப்புரவுத் தொழிலாளி மீது மரம் விழுந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.

கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. உக்கடத்திலிருந்து பேரூர் பைபாஸ் சாலையில் ரவுண்டானா பாலம் அமைய உள்ளதால், சி.எம்.சி காலனி பகுதியிலிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்த மக்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், மேம்பாலம் அமைப்பதற்காக சி.எம்.சி காலனி பகுதியிலிருந்த அரச மரத்தை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த அரச மரம் சாய்ந்தது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த மாநகராட்சி துப்புரவுப் பணியாளரான சுரேஷ் என்பவரது மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.



இதில் அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ராட்சத மரத்தை அப்புறப்படுத்தினர். மேலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுரேஷை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பாலம் அமைக்கும் பணிக்காக மரம் அகற்றிய போது, துப்புரவுத் தொழிலாளி மீது மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...