மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு வாழ்த்து: மனிதக் குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம்‌ பிரார்த்தனை

“நம்‌ மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌” என பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.



கோவை: மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நம்‌ மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌” என பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ ஈஷா நிறுவனர்‌ சத்குருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்‌ கூறியுள்ளதாவது:-

புனிதமான மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாங்கள்‌ செய்துவரும்‌ ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்‌.

மஹாசிவராத்திரி விழா அனைவருக்கும்‌ ஒரு உத்வேகத்தை அளிக்கும்‌ ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும்‌ நிறைந்து இருக்கிறார்‌ என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்‌. நம்முடைய மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனிலிருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌.

மக்களின்‌ ஆன்மீக வளர்ச்சிக்காகவும்‌, அவர்களின்‌ வாழ்க்கை மேம்படுவதற்கும்‌ நீங்கள்‌ எடுத்து வரும்‌ அயராத முயற்சிகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்கவை. சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள்‌, கல்வி, மருத்துவம்‌ மற்றும்‌ சமூக மறுமலர்ச்சி என பன்முக திட்டங்களை நீங்கள்‌ முன்னெடுத்து செய்துவருகிறீர்கள்‌. உங்களுடைய இந்த முயற்சிகள்‌ அனைத்தும்‌ எண்ணற்ற மக்களின்‌ வாழ்வில்‌ நேர்மறை மாற்றத்தை உருவாக்கும்‌ நோக்கக்தை கொண்டுள்ளது.

இந்த மஹாசிவராத்திரி விழா, மனிதக்குலம்‌ தனது அறியாமையிலிருந்தும்‌, இருளிலிருந்தும்‌ கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும்‌. மனித குலத்தின்‌ மீது தனது ஆசிகளை பொழியுமாறு ஆதியோகியை நான்‌ பிரார்த்திக்கிறேன்‌.

இவ்வாறு பிரதமர்‌ மோடி கூறியுள்ளார்‌.

இதற்கு நன்றி தெரிவிக்கும்‌ விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, “ஆதியோகியில்‌ நடக்கும்‌ மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர்‌ நரேந்திர மோம ஜி அவர்களுக்கு எங்களது நன்றிகள்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ishafoundation/status/1497791423118147589 ?t=9i7j;BDSn4eA1Mcq5VisEfg&s=19

ஈஷா மஹாசிவராத்திரி விழா மார்ச்‌ 1-ம்‌ தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம்‌ வழியாக 170 நாடுகளிலிருந்து சுமார்‌ 10 கோடிக்கும்‌ அதிகமான மக்களின்‌ பார்வையைக் கவர்கிறது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...