தனியார் பைனான்சில் இருந்து பேசுவதாக கூறி மில் ஊழியரிடம் 1.6-லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: தனியார் பைனான்சில் இருந்து பேசுவதாக கூறி மில் ஊழியரிடம் 1.6-லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் செந்தில்குமார்(45). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் 25-ந் தேதி எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் தனியார் பைனான்சில் இருந்து பேசுவதாகவும், உங்கள் தேவைக்கு ரூ.8.5-லட்சம் வரை கடன் தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடன் தொகையைப் பெற பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் தொகை மற்றும் மறைமுக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், கடன் தொகை ஒப்புதல் பெற்றவுடன், நீங்கள் செலுத்திய பணமும் உங்களுக்குச் சேர்த்துத் திரும்ப வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய நான் பல்வேறு கட்டங்களாக அந்த நபர் சொன்ன 3-வெவ்வேறு வங்கி கணக்கில் ரூ.1.61-லட்சம் செலுத்தினேன். அதன் பின்னரும் அந்த நபர் கடன் பெற்று தரவில்லை. தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பல முறை முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே மோசடி நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.