கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு: திருப்பூரில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதத் தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1-லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.



திருப்பூர்: கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்வபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50-மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ₹1,000-வீதம் 4-ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.



இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதத் தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1-லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...