விசைத்தறி தொழிலாளர்களுக்கு விடியல்‌ கிடைக்குமா? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை

ஜனவரி 9-ஆம்‌ தேதியிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும்‌ கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குக் காரணம்‌ ஆளும்கட்சியின்‌ மெத்தன போக்கு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு முழுமையான மனிதனுக்கு ஆள்‌ பாதி ஆடை பாதி, என்ற முதுமொழி எல்லோரும்‌ அறிந்ததே. இதன்‌ மறைபொருளாக இதன்‌ மறைபொருள்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ விவசாயியும்‌ நெசவாளர்‌ மிக மிக முக்கியம்‌ என்பதே.

ஒரு சமுதாயம்‌, நன்றாக இருக்கிறது என்றால்‌ அந்த சமுதாயத்தில்‌ உள்ள விவசாயியும்‌ நெசவாளரும்‌ நன்றாக இருக்கிறார்கள்‌ என்று அர்த்தம்‌. ஆனால்‌ இன்று கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின்‌ நிலை கவலைக்கிடமாக உள்ளது. விசைத்தறி தொழில்‌ முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. காரணம்பேட்டை பகுதியில்‌ சுமார்‌ 5-ஆயிரம்‌ தொழிலாளர்கள்‌ தொடர்ந்து மூன்று நாட்களாக அடையாள உண்ணாவிரதத்திலிருந்தனர்‌. அவர்களின்‌ குடும்பமும்‌ வேறுவழியின்றி உண்ணா நிலையில்‌ தான்‌ இருக்கிறார்கள்‌.

தற்போது பல்லடம்‌, சோமனூர்‌, அவிநாசி, புதுப்பாளையம்‌, மங்கலம்‌ ஆகிய பகுதிகளில்‌ ஆடிக்கொண்டிருந்த சுமார்‌ ஐந்து லட்சம்‌ விசைத்தறிகள்‌, மூடிக்கிடக்கிறது. இங்கே உழைத்துக்‌ கொண்டிருந்த இரண்டு லட்சம்‌ தொழிலாளர்கள்‌ வாடி கிடக்கிறார்கள்‌. கொரோனா தொற்றுநோயால்‌ கொடுமையாகப் பாதிக்கப்பட்ட பொருளாதார பின்னடைவிலிருந்து, மீண்டு வர முயற்சிக்கும்‌ 3000-கைத்தறி உரிமையாளர்கள்‌ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்‌. சுமார்‌ 200-கோடி ரூபாய்க்கான மூலப்பொருட்கள்‌ முடங்கிக்‌ கிடக்கின்றன.

ஜனவரி 9-ஆம்‌ தேதியிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும்‌ வேலை நிறுத்தத்திற்குக் காரணம்‌ ஆளும்கட்சியின்‌ மெத்தன போக்கு, ஆளும்‌ கட்சியும்‌, அதன்‌ அமைச்சரும்‌, விசைத்தறி தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, எந்த உத்தரவாதமும்‌ கொடுக்கவில்லை. வாடிக்‌ கிடக்கும்‌ தொழிலாளர்களின்‌ வாட்டம்‌ போக்க வழிவகை செய்யாமல்‌, தற்போது திமுக ஆதரவு தொழிற்சங்கங்களை மட்டும்‌ வைத்து, ஒரு சில தறிகளை மட்டும்‌ இயக்க பார்க்கிறார்கள்‌. இது ஆளும்‌ கட்சிக்கு அழகா? ஆளும்கட்சியின்‌ தொழிலாளர்‌ விரோத போக்கை, கூட்டணியில்‌ உள்ள கம்யூனிஸ்டுகளும்‌ கூட கண்டுகொள்ளவில்லை.

கோவை, திருப்பூர்‌ மாவட்ட ஆட்சியர்கள்‌ நடத்திய பேச்சு வார்த்தையில்‌ எந்த முன்னேற்றமும்‌ இல்லை. கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின்‌ ஊதிய உயர்வு கோரிக்கையை ஒப்பந்தம்‌ நிறைவேற்றப்படாமல்‌ இந்த பிரச்சனை தீரப்போவதில்லை. நாளை கஞ்சித்‌ தொட்டி திறந்து தொழிலாளர்கள்‌ போராடப்‌ போவதாக அறிவித்திருக்கிறார்கள்‌.

தமிழக அரசு இனியும்‌ காலம்‌ கடத்தாமல்‌, தன்‌ மெத்தனப்‌ போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்டிருக்கும்‌ விவசாயத் தொழிலாளர்களை அழைத்துப்‌ பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மூடிக்கிடக்கும்‌ விசைத்தறிகளை ஓடச்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று பாதிக்கப்பட்டிருக்கும்‌ தொழிலாளர்கள்‌ சார்பில்‌, மாநில அரசை வலியுறுத்துகிறேன்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...