சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28-அடியாக சரிவு

சிறுவாணி அணையிலிருந்து தினமும் 97-எம்எல்டி முதல் 103-எம்எல்டி வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.


கோவை: கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணை கோவை மாநகரின் 30-வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுதவிர வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கோவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் 45-அடியை எட்டியது. சிறுவாணி அணை 49-அடி உயரம் கொண்டது.

கோவையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 28-அடியாகச் சரிந்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரே மாதத்தில் சிறுவாணி அணையிலிருந்து 11-அடி அளவுக்குத் தண்ணீர் குறைந்துள்ளது.

சிறுவாணி அணையிலிருந்து தினமும் 97-எம்எல்டி முதல் 103-எம்எல்டி வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.

இதனால் அணையிலிருந்து தினமும் 60-எம்எல்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 53-எம்எல்டி கோவை மாநகருக்கும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...