5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்: கோவையில் காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் சுகாதார துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, போலியோ சொட்டு ம‌ருந்து பெற‌ மாவட்டத்தில்,  த‌குதியான‌ குழ‌ந்தைக‌ள் 3, 37, 390 உள்ளனர் என்றும் அதற்காக 1,569 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கோவை: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாமை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டத்தில் சுகாதார துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, போலியோ சொட்டு ம‌ருந்து பெற‌ மாவட்டத்தில், த‌குதியான‌ குழ‌ந்தைக‌ள் 3, 37, 390 உள்ளனர் என்றும் அதற்காக 1,569 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



சுகாதார மையங்கள், அரசு ம‌ருத்துவ‌ம‌னை, அர‌சு ப‌ள்ளிக‌ள், அங்க‌ன்வாடிகள் என 1,303 மைய‌ங்க‌ளிலும், விமான‌ நிலையம், ர‌யில் நிலைய‌ம், பேருந்து நிலைய‌ம் போன்ற‌ ப‌ய‌ண‌வ‌ழி மைய‌ங்க‌ளில் 29 இட‌ங்க‌ளில் போலியோ சொட்டு மருந்து இன்று வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து.

அதேபோல, 22 ந‌ட‌மாடும் மையங்கள் மூலம் தொலைதூர‌த்தில் வாழும் பழங்குடி மற்றும் ம‌லைவாழ் மக்கள், செங்க‌ல் சூளை, க‌ட்டிட‌ வேலை செய்யும் இடங்களில் இருக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ம‌ருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது தவிர, 215 த‌னியார் மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு ம‌ருந்து வ‌ழ‌ங்குவ‌த‌ற்காக‌ சுகாதார ப‌ணியாள‌ர்க‌ள், அங்க‌ன்வாடி ப‌ணியாள‌ர்க‌ள், ஆசிரிய‌ர்க‌ள் என 6,536 பணியாள‌ர்க‌ள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கப்பட்ட முகாமில் ஆட்சியர் ஏற்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, டீன் நிர்ம‌லா மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...