மகளிர் நலனுக்காக, சிறப்பு பிரிவு பிசிஓஎஸ் கிளினிக் இன்று கோவை எல்சி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின் இன்றியமையாமை, பிஎம்ஐ, மாதவிடாய் நாட்காட்டி இவற்றின் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி கல்லூரிகளில் கொண்டு சேர்ப்பது எல்சி மருத்துவ குழுவின் நோக்கம்.


கோவை: மகளிர் நலனுக்காக சிறப்பு பிரிவு பிசிஓஎஸ் கிளினிக் இன்று கோவை எல்சி மருத்துவமனையில்துவங்கப்பட்டது.

எண்டோஸ்கோப்பி, லேபிபராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில், கோவையில் தலைசிறந்து விளங்கும் டாக்டர் பி.எஸ். ராஜன் தலைமையில் இயங்கும் எல்சி மருத்துவமனையில், புதிதாக மகளிர்

நலன் சிறப்பு பிரிவாக எல்சி பிசிஓஎஸ் கிளினிக்இன்று துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம்.பேசிய எல்சி பிசிஓஎஸ் கிளினிக் மருத்துவர்கள் ரேவதி மற்றும் சவிதா பேசுகையில்,

"இன்றைய உலகில் பத்தில் மூன்று பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது"

பெரும்பாலான மகளிர் சந்தித்து வரும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்,கருவுறுதல், அதிக எடை, என பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக கருதப்படுவது பிசிஓஎஸ் (PCOS) என்ற

சினைப்பை (OVARY) நீர்க்கட்டி.

குறிப்பாக, இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பிளமையும். கொழுப்பு நிறைந்த உணவு பழக்கவழக்கங்களாலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளாலும் மகளிர்எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இந்த பிசிஓஎஸ்.

இன்றைய உலகில், பத்தில் மூன்று பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை என்றாலும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியது என்பது சற்றேஆறுதல் அளிக்கும் ஒன்றாகும்.

பெண்களின் குழந்தை மகப் பேறுயின்மைக்கான முதற்காரணியாக கருதப்படுவது இந்த பிசிஓஎஸ் தான்.

பிசிஓஎஸ் அறிகுறிகள்/விளைவுகள் என்னென்ன?

மாதவிடாய் கோளாறுகள், முகத்தில் அதிக முடி வளர்ச்சி, உடல் பருமன்,குழந்தை பேறின்மை, ஹார்மோன்களின் மாற்றம் ஆகியவை ஆகும். வயது பூப்படையும் காலம் முதல் மாதவிடாய் நிற்கும் வயது வரை உள்ள வயதினரை பாதிக்கும் இந்த சினைப்பை நீர்கட்டியானது,

சர்க்கரை வியாதி. இரத்த அழுத்தம், மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், கர்ப்பப்பை புற்றுநோய்,

உளவியல் ரீதியான பிரச்சினைகள், இந்த பிசிஓஎஸ்ன் நீண்ட கால விளைவுகளாகும்.

குறிப்பாக, கோவிட் இதன் பாதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், உணவு பழக்க வழக்க மாறுதல்கள் போன்ற

காரணங்களால் இதனால் பாதிக்கப்படும் மகளிரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

விழிப்புணர்வு

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின் இன்றியமையாமை, பிஎம்ஐ அட்டவணை பின்பற்றுதல், மாதவிடாய் நாட்காட்டி இவற்றின் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி கல்லூரிகளில் கொண்டு சேர்ப்பது எல்சி மருத்துவ குழுவின் நோக்கம் என்றும் வரும் நாட்களில் பெண் மலட்டுத்தன்மையை தவிர்க்க இது ஒரு பெரும் முயற்சியாக இருக்கும், என்கின்றனர் மருத்துவர்கள்.



வயிற்று உபாதைகளுக்கு லேப்ராஸ்கோபி மூலம் ஒருநாள் தீர்வுகள் அளித்துவரும் எல் சி மருத்துவமனை மகளிர் நலனில் கர்ப்பப்பை சினைப்பை வியாதிகளுக்கு அதிநவீன

லேப்ராஸ்கோப்பி மூலம் பல மகளிருக்கு, அவர்கள் அன்றாட பணிகள் பாதிக்காத வண்ணம் அறுவை சிகிச்சைக்குப் பின் துரித குணமாக்குதல் மூலம் சேவை அளித்து

வருகின்றது.

புதிய மருத்துவ பிரிவு திறப்பு விழாவின் போது, எல் சி மருத்துவக் குழுவினர் டாக்டர். பி.எஸ் ராஜன், டாக்டர். வித்யா ராஜன், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் டாக்டர். ரேவதி, டாக்டர். சவிதா ஆகியோர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கந்தசாமி, டாக்டர். கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...