கடந்த 6 வருடங்களாக விக்டோரியா ஹால் பயன்படுத்தப்படாமல் இருந்ததாலும், இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதாலும் புனரமைப்பு பணியில் தாமதம்.
கோவை: கோவை விக்டோரியா ஹாலில் புனரமைப்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கவுன்சிலில் இருக்கும் விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி இன்னும் முடிவடையாத காரணத்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் பதவி ஏற்கவுள்ளனர்.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தி.மு.க. கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.
கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 2ம் தேதி கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளதால், அந்த கூட்டரங்கை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மாமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கை, மேஜைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி வளாகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் மும்மரமாக நடைபெற்ற வருகிறது.
இந்த கூட்டரங்கு, கடந்த 6 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாலும், முன்பு 72 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை தற்போது 100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், அனைவரும் வசதியாக அமர இருக்கைகள் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, மாநகராட்சியில் 60க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்கள் உள்ளதால் விக்டோரியா ஹால் பகுதியில் உள்ள கழிவறைகளும் புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புனரமைப்பு பணிகள் இன்னும் முடிவு அடையாததால், மாமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவானது, விக்டோரியா ஹாலில் நடைபெற முடியாத சூழல் நிலவி வருகிறது. அதனால், பதவி ஏற்பு விழாவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே, ஆர்.எஸ். புரம் கலையரங்க கட்டிடத்தை சுத்தம் செய்வதிலும், பதவியேற்பு விழாவை நடத்தும் முன்னேற்பாடு பணிகளிலும், துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.