கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம்..!

வரும் மார்ச் 9ம் தேதி வரை எம்.பில்., மற்றும் பி.எச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.


கோவை: ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கு ஜே.ஆர்.எப்.,ல் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை மீண்டும் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பல்கலை மானியக்குழு சார்பில், இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர்(ஜே.ஆர்.எப்.,) எனும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனாவால், இத்தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டுக்கான தேர்வு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளில் சேர ஆயத்தமாகினர். ஆனால், கோவை பாரதியார் பல்கலையில், ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் கடந்த 15-ந் தேதியுடன் நிறைவடைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பல்கலை நிர்வாகம், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி வரை எம்.பில்., மற்றும் பி.எச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆராய்ச்சி படிப்புகளுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளோம்.

விண்ணப்பிக்க, 13 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்ற நோக்கில் இதை செயல்படுத்தி உள்ளோம், என்றார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...