முதல் நாளான இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருந்து தங்களது வேலையை இவர்கள் துவங்கினர்.
கோவை: மாசில்லா கோவையை அமைத்திட வேண்டி “தீ பிளானட் வாரியர்” எனும் அமைப்பை உருவாக்கி இன்று முதல் கோவையில் உள்ள அனைத்து சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற கோவை மாநகராட்சியுடன் இணைந்து தீ பிளானட் வாரியர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று ஆர் எஸ் புரம் பகுதியிலிருந்து தங்களது வேலையை இவர்கள் துவங்கியுள்ளனர்.

இது குறித்து தீ பிளானட் வாரியர் ஒருங்கிணைப்பாளர் திவ்யா செட்டி கூறியதாவது;
கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்லும் வண்ணமே இதனை தீ பிளானட் வாரியர் அமைப்பு ராக் (RAAC) அமைப்பு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் இன்றிலிருந்து அதற்கான பணியை துவங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்று நகரில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய உள்ளதாகவும் மக்களுக்கு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரிதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டில் தேங்கும் குப்பைகளை தாங்கள் வசிக்கும் தெருக்களின் சாலையோரங்களில் கொட்டிவிடுவதால் பெரிதும் மக்கள் நோய்வாய்ப்படும் அபாயம் ஏற்படுள்ளதாகவும், மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமே இதனை தாங்கள் செய்வதாகவும் கூறினார்.
கோவையின் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் காகிதம், பிளாஸ்டிக், உலோகங்கள், போன்ற கழிவுகள் குறித்தான கழிவு மேலாண்மை விழிப்புணர்வையும் நாங்கள் செய்துவருகிறோம் எனவும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியுடன் இணைந்து இந்த கழிவுகளை அகற்றும் பணியை செய்வதால் கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பெரிதும் இந்த பணியில் உதவிகரமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும், கழிவுகளை அகற்றும் இப்பணிக்கான கால அவகாசம் குறிப்பிட முடியாததால் இதனை தொடர்ந்து செய்வதாக முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் இப்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இதில் வாய்ப்புண்டு என தெரிவித்தார்.