சேரன் மாநகரில் உள்ள 2-மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யாமல் பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யாமல் உள்ள காரணத்தால் அவற்றை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: ஐந்தாண்டுகளுக்கு மேல் சுத்தம் செய்யப்படாத சேரன்மாநகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, பெயிண்ட் மட்டும் பூசிவிட்டு தொட்டியைச் சுத்தம் செய்யாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 568 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

ஆனால் அந்த இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி களும் உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சேரன் மாநகரில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. உரியமுறையில் பராமரிக்காத காரணத்தால் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராகக் கோவையைச் சேர்ந்த எஸ் பி வேலுமணி பணியாற்றிய போதிலும் சேரன்மாநகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அவலநிலை குறித்து கோவை மாநகராட்சியில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
சென்னையில் உள்ள தமிழக உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து டில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று புகார் அளிக்கப்பட்டது.
அவ்வமைப்பு கொடுத்த உத்தரவின்பேரில் சேரன் மாநகரில் உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புனரமைக்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் தொட்டிகள் உட்புறம் சுத்தம் செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யாமல் உள்ள காரணத்தால் அவற்றை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாபு இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.