ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி: கோவையில் ஒரு சவரன் தங்கம் 40-ஆயிரம் தொட்டது: போர் தொடர்ந்தால் ஒரு சவரன் 50-ஆயிரம் ரூபாயாக உயரும்

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடர்ந்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் 48,000-முதல் 50-ஆயிரம் ரூபாயை எட்டும். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு இருநாடுகளும் தீர்வு காண்பது மட்டுமே தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுக்கும்.


கோவை: கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உலக அளவில் அதிக மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நகைகள் விற்பனையே நடைபெறாத போதிலும் உலகளவில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து.

இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாயை கடந்து வரலாறு படைத்தது. நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை குறையத் துவங்கியது.

கடந்த சில மாதங்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 35, 36-ஆயிரம் ரூபாய் ரேஞ்சில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடக்கும் சூழல் ஏற்பட்டதிலிருந்தே தங்கத்தின் விலை உயரத் துவங்கியது.

கடந்த 15-நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை கோவையில் 2,000-ரூபாய் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36-ஆயிரத்து 500-ரேஞ்சில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 38, ஆயிரத்து 500-ரேஞ்சில் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40-ஆயிரம் ரூபாயை கடந்தது. இன்று வெள்ளிக்கிழமை சற்று குறைந்து 38,936-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடர்ந்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் 48,000-முதல் 50-ஆயிரம் ரூபாயை எட்டும். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு இருநாடுகளும் தீர்வு காண்பது மட்டுமே தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...