கோயில் முன்பு நடப்பட்டுள்ள திருக்கம்பத்தில் தேர்த்திருவிழா முடியும் வரை பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை என தொடர்ந்து 3-நாட்கள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருக்கம்பம் நடப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.
பொள்ளாச்சி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில், இந்த ஆண்டு மாசிமாத தேர்திருவிழா கடந்த 15-ம் தேதி இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து தினமும் 3-நேரம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.
இதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு கோயில் முன்பு திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கரியகாளியம்மன் கோயிலிலிருந்து பூஜிக்கப்பட்ட திருக்கம்பம், மேள தாளம் முழங்கத் தெப்பக்குளத்துக்கு வரப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பின் கம்பத்தில் நவதானியங்கள் கட்டப்பட்டு மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின் கோயில் முன்புள்ள பீடத்தில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை முதல் நகரில் பல்வேறு பகுதியிலிருந்து கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள், கோயில் முன்பு நடப்பட்ட திருக்கம்பத்தில் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு அம்மனை தரிசித்துச் சென்றனர்.
கோயில் முன்பு நடப்பட்டுள்ள திருக்கம்பத்தில் தேர்த்திருவிழா முடியும் வரை பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். இதில் வரும் 1-ம் தேதி கோவில் பூவோடும், இதை தொடர்ந்து, சிலநாட்களில் பக்தர்கள் பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின், கொடியேற்று நிகழ்ச்சியும், 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை என தொடர்ந்து 3-நாட்கள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.