பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 5-பேர் கைது

சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 5-பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 5-பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 1-லட்சம் மதிப்பிலான 73-கிலோ சந்தனக் கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப் வனப்பகுதி மஞ்சள் போர்ட் பள்ளம் என்கிற காப்புக் காடு பகுதியிலிருந்த, 2-சந்தன மரங்களை வெட்டி சிலர், தலைச்சுமையாக சர்க்கார்பதி அருகேயுள்ள காண்டூர் கால்வாய் கொண்டு வந்து கடத்த முயற்சி நடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த மாருதி கார் ஒன்றில், வனப்பகுதியிலிருந்து வந்த 3-நபர்கள் கொண்டு வந்த சந்தன மரக்கட்டைகளை ஏற்றினர்.



இதைக்கண்ட, வனத்துறையினர் மாருதி காரை சுற்றி வளைத்து, கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட, வெங்கடேஷ்(40), முஹம்மது பஷீர்(47), மணிகண்டன்(33), சக்கரவர்த்தி(26) மற்றும் அன்பழகன்(21) ஆகிய 5-பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வனப்பகுதியிலிருந்து வெட்டி கடத்திக்கொண்டு வந்த சுமார் ரூ.1-லட்சம் மதிப்பிலான 73-கிலோ எடை கொண்ட 39-சந்தன கட்டைகள் மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 5-பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில், ஆஜர்படுத்தினர்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...