கோவை மாநகராட்சியில் தோ்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களிலிருந்து மேயர் பதிவிக்கும், துணை மேயர் பதவிக்கும் தலா ஒருவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்புக்கூட்டம் 02.03.2022 காலை 10.00 மணிக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கோவை மாநகராட்சியில் 04.03.2022 வெள்ளிக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு தோ்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களிலிருந்து மேயர் பதிவிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கும் தலா ஒருவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும், கோவை மாநகராட்சியில் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
02.03.2022 காலை 10.00 மணிக்கு மாநகராட்சி கலையரங்கம், திருவேங்கடசாமி ரோடு கிழக்கு, ஆர்.எஸ்.புரத்தில், நடைப்பெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.