ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவாகும் இந்த அறுவை சிகிச்சையை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் குழு இலவசமாக செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் அருளரசன் (21), இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற எஸ்.ஐ. தேர்வுக்கு பயிற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் பயிற்சியின் போது இவரது வலது முழங்காலில் அடிபட்டு ஜவ்வு கிழிந்து விட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்சத்திற்கும் மேல் செலவாகுமென தெரிவித்துள்ளனர்.
செலவு செய்ய வசதி இல்லாததால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த அருளரசனுக்கு, கல்லூரி முதல்வர் முருகேசன் வழிகாட்டுதலின்படி நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

எலும்பு முறிவு சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் குமார் மற்றும் மருத்துவர் சுந்தரமூர்த்தி, எலும்பு முறிவு மருத்துவர்கள் அடங்கிய அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் குழுவினர், அருளரசனுக்கு அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் 2 லட்சத்திற்கும் மேல் செலவாகும் இந்த அறுவை சிகிச்சையை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் குழு இலவசமாக செய்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் செய்த முதல் நுண்துளை அறுவை சிகிச்சை இதுவாகும்.
மேலும், தற்போது அதிநவீன மருத்துவத் துறைக்குத் தேவையான கருவிகள் உபகரணங்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பதால், கோவை அரசு மருத்துவமனையை பொதுமக்கள் நாட வேண்டிய அவசியம் இல்லை எனவும் இங்கேயே தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.