வரும் மார்ச் 10ம் தேதி தமிழக அஞ்சல் வட்ட அளவிலான அஞ்சல் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..!

இந்த கூட்டத்தில் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை நுகர்வோர் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


கோவை: தமிழக அஞ்சல் வட்ட அளவிலான அஞ்சல் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை, நுகர்வோர் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அஞ்சல் துறை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் வழங்கலாம்.

புகார்களை, 'விஜயலட்சுமி, உதவி இயக்குநர், தலைமை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு, வரும் மார்ச் 4ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

அல்லது, [email protected] என்ற இ - மெயில் மூலமும் மனுக்களை அனுப்பலாம்.

புகார்களில், அஞ்சலின் எண், அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பியவர், பெற்றவரின் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மேலும், சேமிப்பு திட்டம், அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு தொடர்பாக புகார் இருப்பின் அதற்கான கணக்கு எண் போன்ற விபரங்களுடன், தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...