கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் தீவிபத்து..!

இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.



கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆண்கள் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.



கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆண்கள் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்த மைதான பணிக்காக கொண்டுவரப்பட்ட சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) மைதானத்தின் ஒரு பகுதியில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சிந்தடிக் டர்ப் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு திடீரென தீ பரவியது. இதனால் அந்த சிந்தடிக் டர்ப் பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.



இதையடுத்து, தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...