பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை கடத்த முயற்சி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்னை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சிவசாரதி எலக்ரிஷனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கார்த்திகை ஜோதி இவர் பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் கார்த்திகை ஜோதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க வேறு வார்டுக்கு அழைத்துச்சென்றனர் அவரது உறவினர்களும் குழந்தையை தனியாக விட்டு விட்டு அவருடன் சென்று விட்டனர்.



இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத பெண் அந்த குழந்தை எனது உறவினர்கள் குழந்தை என எடுத்துக்கொண்டு கடத்த முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கம் உள்ள மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் குழந்தையின் உறவினர்கள் அங்கு வந்ததும் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அவரை பிடித்து வைத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்த பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் கடத்த முயன்ற பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பணை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா இதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் கர்பிணி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...